ஈழ நிகழ்வுகளை தொடர்ந்து தடுக்கும் திமுக அரசு (VIDEO)
இந்தியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடத்திய அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வின் போது ஏற்பாட்டுக்குழுவினருக்கும் தமிழக காவல்துறையினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
இதன்போது திடீரென நுழைந்த காவல்துறையினர் நிகழ்வினை நிறுத்துமாறு அறிவித்த நிலையில், ஏற்பாட்டுக்குழுவினருக்கும் தமிழக காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த நிகழ்வு தொடர்பில் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் பொலிஸார் தடை ஏற்படுத்தியிருந்தனர் என்றும் ஏற்பாட்டுக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.
இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுதன் ராஜ் எம்மோடு கலந்துக்கொண்டு விளக்கமளித்துள்ளார்.