பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதியை முடக்கும் இந்தியா
பாகிஸ்தானுக்கு உலகளாவிய நிறுவனங்கள் அளிக்கும் நிதியுதவியை மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படவிருக்கும் நிதி மற்றும் கடன்களை மறுபரிசீலனை செய்ய சர்வதேச நாணய நிதியம் உள்பட உலகளாவிய நிதி நிறுவனங்களிடம் இந்தியா கோரிக்கை விடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு பொதுத்துறை கடன்கள், மானியங்கள், தொழில்நுட்ப உதவிகள் என மொத்தம் 43.4 பில்லியன் டொலர்களை வழங்கிய ஆசிய மேம்பாட்டு வங்கியிடமும், காலநிலை பின்னடைவு கடன் திட்டத்தின்கீழ், 1.3 பில்லியன் டொலர் அளிக்கும் சர்வதேச நாணய நிதியத்திடமும் மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி
மேலும், பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க 320 மில்லியன் டொலர் வழங்கவும் ஆசிய மேம்பாட்டு வங்கி உறுதியளித்திருந்தது.
இந்த நிதியுதவி குறித்தும், பாகிஸ்தானுக்காக 20 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் குறித்தும் மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரிக்கை விடலாம் என்றும் கூறுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
