சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்தியாவிற்கு ஆட்கடத்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos)
மன்னார் தீவு பகுதியில் இடம் பெற்று வரும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்தியாவிற்கு ஆட்கடத்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடலில் வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி கொமாண்டர் குமார , கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், அரச , தனியார் நிறுவன அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது கடற்தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் தொடர்பில் கடற்படை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் ஆட்கடத்தல் தொடர்பாகவும் பல விடயங்கள் கடற்தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்த பட்டிருந்தது. மேலும் மக்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கடற்படை அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.