இலங்கை மக்களுக்கு முதலில் கரம் கொடுத்த இந்தியா - செல்வம் அடைக்கலநாதன் எம்.பி பகிரங்கம்
இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு இடங்களின் போது இந்தியா முதன் முதலில் கரம் கொடுத்துள்ளது. இலங்கையில் குறிப்பாக வடக்கு மக்களையும் காப்பாற்றுகின்ற தமது கடமையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (01.01.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வீழ்ச்சி அடைந்த போது
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
அவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ,இலங்கை தமிழரசு கட்சி மற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் அடிப்படையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற தங்களுடைய கோரிக்கையை முன்வைத்தோம்.
பழைய முறைப்படி இத்தேர்தலை நடத்தி, எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ளும் சூழலை உருவாக்கும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்துள்ளோம்.
அதேநேரத்தில் பொருளாதார ரீதியில் இலங்கை வீழ்ச்சி அடைந்த போது தனது காலை பதித்தது.
இயற்கை அனர்த்தத்தின் போது மக்கள் தவித்த போது இந்தியா முதன் முதலாக தனது காலை பதித்துள்ளது.
ஏனைய நாடுகள் தமது அறிவிப்புக்களை
இலங்கையில் குறிப்பாக வடக்கு மக்களையும் காப்பாற்றுகின்ற தமது கடமையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர்.
அந்த வகையில் ஜனாதிபதியிடம் குறிப்பாக நாடாளுமன்றத்திலும் தெரிவித்திருந்தேன்.

இலங்கைக்கு அன்மையிலுள்ள நாடு இந்தியாவை பற்றிபிடியுங்கள். நேசக்கரம் நீட்டி சமாதானத்துடன் இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்ற ஒரு வாய்ப்பு வருகின்ற போதே நாம் இலங்கையை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் கூறி இருந்தோம்.
அனைத்தையும் நாங்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் கூறியிருந்தோம். இலங்கையில் ஏற்பட்ட இடர்கள் போது முதன் முதலில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை முன்னெடுத்த பின்னர் ஏனைய நாடுகள் தமது அறிவிப்புக்களை முன்னெடுத்தது உதவிகளையும் செய்துள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam