இந்தியா வழங்கும் 55 மில்லியன் டொலர் கடனுதவி
இந்தியாவின் எக்ஸிம் வங்கியில் டொலர்களை கடனாக பெறும் உடன்படிக்கையில் நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன இன்று கைசாத்திட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையில் இந்திய அரசின் சார்பில் எக்ஸிம் வங்கியின் முகாமையாளர் நிர்மித் நரேந்திரவேதி கையெழுத்திட்டுள்ளார்.
சிறுபோக பயிர் செய்கைக்காக உடனடியாக தேவைப்படும் 65 ஆயிரம் மெற்றி தொன் யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசு, இந்திய அரசிடம் கடன் வசதியை கோரி இருந்தது.

இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் யூரியா உரத்தை கொள்வனவு செய்ய இந்தியா 55 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இணங்கியது.
உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, அமை்சசர் மகிந்த அமரவீர உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
நாடு அத்தியவசிய உணவு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாகவும் மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை வழங்கி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam