இங்கிலாந்து அணியை முதல் போட்டியில் தோற்கடித்த இந்தியா
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
நாக்பூரில் நேற்று (06) இடம்பெற்ற இந்தப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 47.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.
இதில் ஜோ பட்லர் 52 ஓட்டங்களையும், ஜேக்கப் பெத்தல் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
6 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து
இந்திய அணியின் பந்துவீச்சில் ஹர்சித் ராணா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 38.4 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் 4 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.
இதில் சுப்மன் கில் 87 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் ஐயர் 59 ஓட்டங்களையும், அக்சர் பட்டேல் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
எனினும் தொடர்ந்தும் துடுப்பாட்டத்தில் தோல்வியை சந்தித்து வரும் அணித்தலைவர் ரோஹித் சர்மா நேற்றைய போட்டியிலும் 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |