கோவை கார் வெடிப்பில் இலங்கை ஈஸ்டர் சூத்திரதாரிகளுக்கு தொடர்பா..! என்ஐஏ விசாரணை தீவிரம்
இலங்கை இராணுவ தரப்பினால் கூறப்படுவது போலே இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் கோவையில் இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், அண்ணாமலை உழவுப்படையினரால் விசாரிக்கப்பட வேண்டும் அதனால் நிறைய உண்மைகள் வெளிவரும் எனவும் இன்னும் வெடிக்க இருக்கின்ற உண்மைகள் பலவும் வெளிவரும் என புலனாய்வு செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நீலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க இந்திய உள்துறை உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில் என்ஐஏயின் விசாரணைகள் மீது எவ்வித நம்பிக்கையும் வரப்போவதில்லை. அரசியின் கூலிப்படையாக இயங்கும் எந்தவொரு அமைப்பும் மக்கள் சார்பாக எந்தவொரு தகவலையும் வழங்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
