இந்தியாவை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது! - ரணில் உறுதி
அரசியல், பொருளாதாரம் மற்றும் அண்மைய நாடு என்ற ரீதியில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் நெருங்கிய உறவு நிலை காணப்படுகிறது. ஆகவே இந்தியாவை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுக்க முடியாது.
ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் அனைத்து நாடுகளுடனும் நடபுறவுடன் செயற்பட வேண்டும்.
சீனா அனைத்து நாடுகளுக்கும் உதவி செய்யாது. இலங்கை பொருளாதாரத்தில் எதிர்பார்க்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்தால் தான் சீனா இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்.
தற்போதைய சூழ்நிலையில் சீனாவை தவிர பிறிதொரு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்யாது.
வெளிவிவகார கொள்கை பிற நாடுகளின் தேவைக்கேற்ப வகுக்க கூடாது. அரசாங்கம் வெளிவிவகார கொள்கையினை பிற தரப்பினருக்கு ஏற்றாட்போல் மலினப்படுத்தியுள்ளது.
சமகால அரசியல், மற்றும் பொருளாதரம் தொடர்பில் நிகழ்நிலை முறைமை ஊடாக இன்று இடம் பெற்ற கலந்துரையாடலில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
