சர்வதேசத்தின் துணையோடு மூன்று ஆண்டுகளாக தொடரும் ஆயுத போராட்டம் : கஜேந்திரன்
இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயற்பாட்டிற்குத் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழராய்ச்சி மாநாட்டிலே படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூறும் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு நினைவுத் தூபியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் அனுஷ்டிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்த பொதுமக்களை பொலிஸார் தாக்கினர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே தவறு இழைத்தனர்.அப்பாவி மக்கள் 11 பேர் படுகொலை செய்வதற்குக் காரணமாக அமைத்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்று 47 வருடங்கள் கடந்த நிலையிலும், அது தொடர்பாகக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அப்போதிருந்த மாநகர மேஜர் அல்பிரெட் துரையப்பா செய்த அந்த பெரும் துரோகம் ஆட்சிக் காலத்திலேயே தமிழர்கள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடிய ஒரு நிலைமை தான் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
தமிழர்களைப் பொறுத்த வரையிலே தமிழர்கள் மீதான இந்த படுகொலைகளை மட்டுமல்ல வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் ஸ்ரீலங்கா காவல்துறையினர் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் பாரியளவிலான போராட்டத்தில் ஈடுபட அதற்கான சூழலை உருவாக்கியது.
அந்த ஆயுத போராட்டம் பின்னர் சர்வதேச துணையோடு இருந்தாலும் அது மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கவில்லை. ஒரு துரோகத்தனமான செயல்பாட்டிலேயே தமிழ் கட்சிகள் ஈடுபட்டிருப்பது என்பதுதான் மிகவும் துரதிருஷ்டவசமானதாக இருக்கிறது.
இந்த செயல்பாடானது மீண்டும் தமிழர்களை எங்கே கொண்டு செல்லப் போகின்றது என்பது தொடர்பாக ஒரு அச்சம் ஏற்படுகின்றது. தமிழர்களை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஷ்டி தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி எழுபத்தி நான்கு வருடங்களாகப் போராடி வந்திருக்கின்றனர்.
இன்று தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு பெற்ற கட்சிகள் ஒற்றையாட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தோம்.
அன்று எங்களுடைய கருத்தைப் பொய் என்று சொல்லிச் சொன்னார்கள் 2015ஆம் ஆண்டில் நாங்கள் சொன்ன கருத்துக்கள் ஓரளவுக்கு உண்மையாகத் தொடங்கியது.
நீதியரசராக இருந்த கைக்கூலியான வீக்கினேஸ்வரனை தமிழர்களில் ஒருவராகக் காட்டி, தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கூட அவரை ஒரு நல்லவர் வல்லவர் என்று எங்களுடைய மக்களுக்குக் காட்டி அவரை தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைக்கத் துணை நின்று இருந்தார்கள்.
புலம்பெயர் தேசங்களிலிருந்தும் அவருடைய துரோகத்தனம் தெரிந்து கொண்டும் அவருக்குத் துணைநின்றனர். விக்னேஸ்வரன் கூட இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்த துரோகத்துக்குத் துணை போயிருக்கின்றார். மக்கள் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சித்தார்த்தன், மாவை சேனாதிராசா விக்னேஸ்வரன் ஆகியவர்கள் கூட்டிணைந்து அரசியலமைப்பு ஆவணம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறார்கள்.
இது படிப்படியாக வளர்ச்சி அடைந்து நாடாளுமன்றத்திலும் அந்த அரசியலமைப்பை ஆதரிப்பார்களாக இருந்தால் இந்த தீவில் தமிழர்கள் நிரந்தர அடிமைகளாக்கப்படுவார்கள்.
இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்குத் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுடைய மக்கள் விழிப்படைய வேண்டும் என்று இந்த
தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இந்த மக்கள் மீது நாங்கள்
ஆணையாக நாங்கள் கேட்கின்றோம் என தெரிவித்துள்ளார்.