இலங்கையில் இராமாயண பாதைத் திட்டம் ஆரம்பம்!
புதிய இணைப்பு
இலங்கையில் இராமாயண பாதையின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவளிக்கும் வழிகள் குறித்து ஸ்ரீஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையின் உயர் அதிகாரிகளுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா விவாதித்துள்ளார்.
ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் மற்றும் அவரது குழுவினரை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சந்தோஸ் ஜா சந்தித்துள்ளார்.
சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹாராஜால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையில் இராமாயணப் பாதைத் திட்டத்தின் தொடக்க நிகழ்விலும் சந்தோஸ் ஜா பங்கேற்றார்.
ஸ்ரீஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையானது அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் பொறுப்பில் உள்ள அமைப்பாகும்.
இந்த நிலையில் இராமாயணம் பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய சமஸ்கிருத இதிகாசங்களில் ஒன்றாகும்.
முதலாம் இணைப்பு
இந்தியாவும் இலங்கையும் இணைந்து தரை வழிப்பாலத்தை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santhosh Ja) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) தனியார் விருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இந்த தரைப்பாதை இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்பதோடு நாடுகளுக்கு இடையிலான உறவில் மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்தும்.
பொது வேட்பாளர் களமிறக்கம் குறித்து தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி உப தலைவி கூறியுள்ள விடயம்
சுற்றுலாப் பயணிகளின் வருகை
சுற்றுலாவை மேம்படுத்துவது இரண்டு நாடுகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர் இலங்கையைப் பொறுத்தவரை இது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi) 2023ஆம் ஆண்டு ஜூலை புதுடில்லியில் உச்சி மாநாட்டை நடத்தியபோது வெளியிடப்பட்ட தொலைநோக்கு ஆவணத்தில் இரு நாடுகளிலும் பௌத்த சுற்றுலா மற்றும் இராமாயண பாதையை மேம்படுத்துவதற்கு உறுதியளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா ஏற்கனவே பாரிய பங்களிப்பை
வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |