இலங்கையில் செயற்படும் கட்டுக்கடங்காத பிரிவினரின் நடத்தை குறித்து இந்தியா எச்சரிக்கை
இலங்கையில் செயற்படும் கட்டுக்கடங்காத பிரிவினரின் நடத்தை குறித்து இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய ஆளும் கட்சி அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமி, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டத்தினர், நக்சல்கள், ஜெகாதிகள், சமூகவிரோதிகளால் வழி நடத்தப்படுகின்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
After getting information that the unruly crowds roaming around Colombo are being guided by SL version of Naxals, Jehadis, anti- socials etc ., India has to be concerned about Sri Lanka’s degeneration caused by lumpen elements, and its future impact on India.
— Subramanian Swamy (@Swamy39) July 13, 2022
எனவே இந்த பிரிவுகளால் இலங்கையின் சீரழிவு மற்றும் தமது நாட்டின் எதிர்கால தாக்கம் குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.
முன்னதாக பாரிய எதிர்ப்புகளை சந்திக்கும் ராஜபக்சர்களை இந்தியா பாதுகாக்க, இந்தியா தமது படைகளை அனுமதிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோரியிருந்தார்.
எனினும் இந்த கோரிக்கையை இந்திய அரசாங்கம் நிராகரித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.