சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டம்! சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை (Video)
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி போராட்டம் நடத்தியமைக்கு எதிராக பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்.நீதிமன்றில், குறித்த வழக்கு கட்டளைக்காக நேற்றைய தினம்(23.06.2023) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதாவது சந்தேகநபர்கள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மட்டுமே மன்றில் சமூகமளித்திருந்தார். ஏனைய பிரதிவாதிகள் மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் கட்டளையை வழங்க முடியாதுள்ளதாக நீதவான் ஏ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் தவணைக்கு வருகை தராத பிரதிவாதிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் ,
சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஈ.சரவணன்பவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாநகர முன்னாள் மேயர்
வி.மணிவண்ணன், மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும் பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


















விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
