சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு
78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 49 கைதிகள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளரின் (செய்தித் தொடர்பாளர்) ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டவுள்ளது.
பின்பற்றப்படும் விதிமுறைகள்
இவர்கள் நாளை மறுதினம் (04.02.2026) விடுவிக்கப்படுவர் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு ஜனாதிபதி பொது மன்னிப்பு பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

• கைதிகள் அனுபவிக்கும் ஒவ்வொரு ஆண்டு சிறைத்தண்டனைக்கும் 01 வார மன்னிப்பு வழங்குதல்.
• ரூ.75,000 க்கும் குறைவான அபராதம் செலுத்தாததற்காக சிறையில் உள்ள கைதிகள் அனுபவித்த தண்டனையின் மீதமுள்ள தொகையை இரத்துச் செய்தல்.
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam