சுதந்திர தினத்தில் கோழிகள் மற்றும் முட்டைகளுடன் படையெடுக்கத் தயாராகும் குழுவினர்
இந்த அரசாங்கத்தால் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், கோழி மற்றும் முட்டைகளுடன் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அணிவகுத்துச் செல்வோம் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
75ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதிக்குள் தற்போதைய முட்டை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், இல்லையெனில் கோழிகள் மற்றும் சேவல்களின் சத்தம் மக்களுக்கு கேட்கும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் முட்டைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) அதன் வரலாற்றில் முதல் முறையாக நுகர்வோர் விவகார ஆணையத்தை சந்திக்க வேண்டியிருந்தது என்பதைக் கேட்பது வெட்கக்கேடானது.
கோழிகள் மற்றும் சேவல்களின் சத்தையும் மக்கள் கேட்கக்கூடும்
முட்டை பிரச்சினையை தீர்க்காமல் நாட்டை கட்டியெழுப்புவதில் இந்த அரசியல்வாதிகள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.
அவர்கள் அரசியலமைப்புகள் மற்றும் பல பெரிய தலைப்புகளைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் முட்டை பிரச்சினையை தீர்க்க முடியாது.
எவ்வாறாயினும், பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இந்த முட்டைப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், துப்பாக்கி வேட்டுக்களின் மத்தியில் கோழிகள் மற்றும் சேவல்களின் சத்தையும் மக்கள் கேட்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
