நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்! (Video)
மன்னார்...
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 74 வது சுதந்திர தின விழா இன்று வெள்ளிக்கிழமை (4) மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
காலை 8 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக பணியாளர்கள் மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்ட செயலகம் வரை தேசியக் கொடியை ஏந்தியவாறு அணி நடையாக மாவட்டச் செயலகம் வரை சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மௌன பிராத்தனையும் இடம் பெற்ற தோடு, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து சர்வமத நிகழ்வு இடம்பெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இறுதியாக ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், உதவி அரசாங்க அதிபர், பொலிஸ், இராணுவ,கடற்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக பணியாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் - ஆஷிக்
வவுனியா....
இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வு வவுனியாவில் இன்று (04.02) காலை இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தின் பிரதான சுதந்திர தின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன், அதிதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நரசபை மைதானத்தில் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் வரவேற்கப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களால் தேசியக் கொடி ஏற்றப்படது.
இதன்போது தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், தமிழ், சிங்கள, முஸ்லிம் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கலாசார நடனமும் இடம்பெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நகரசபை மைதானத்தில் அதிதிகளால் மரநடுகையும் இடம்பெற்றது.
நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உதவி மாவட்ட செயலாளர் திருமதி மு.சபர்ஜா, திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தகவல் - திலீபன்