வவுனியா மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுக்கான பணிகள் பூர்த்தி
வவுனியாவில் இடம்பெறவுள்ள இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (04.02.2024) காலை 8 மணிக்கு இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் பெரும்பாலான பணிகள் வன்னி இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஏனைய ஏற்பாடுகளை வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து பிரதேச செயலகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அணிவகுப்பிற்கான ஒத்திகை
அத்துடன் மாணவர்கள், முப்படையினர் ஆகியோரின் அணிவகுப்புக்கான ஒத்திகைகள் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்றிருந்தன.
மேலும் ஏ9 வீதியினை தற்காலிகமாக மூடுவதற்குரிய நடவடிக்கைளும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ சரத்சந்திர தலைமையில் நிகழ்வுகள்
இடம்பெறவுள்ளதுடன், நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு
தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் கலந்து
கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam