நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்

Independence Day Kalmunai
By Independent Writer Feb 04, 2026 11:17 AM GMT
Report

இலங்கையின் 78ஆவது சுதந்திரதினம் இன்று (02.04.2026) கொண்டாடப்பட்டு வருகிறது.

இலங்கை 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.

இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் தேசிய சுதந்திர தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை! சுதந்திர தினத்தில் அநுர சூளுரை - LIVE

இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை! சுதந்திர தினத்தில் அநுர சூளுரை - LIVE

கல்முனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தயார் நிலையில் அரசாங்கம் - ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

தயார் நிலையில் அரசாங்கம் - ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

செய்தி - பாரூக் சிஹான்

வவுனியா

வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையாக இடம்பெற்ற சுதந்திர தினம் இலங்கையின் 78வது சுதந்திரதினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையாக இடம்பெற்றது.

பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மதகுருமார் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தமிழ் சிங்களம் என இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திர தினம் எளிமையாக இடம்பெற்றது.

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka 

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கில் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் நோக்குடன் வாகனப்பேரணியும் நடைபவனியும் வவுனியாவில் இன்று (04.01) இடம்பெற்றது.

வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வானது வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஆரம்பமாகி வைத்தியசாலை சுற்றுவட்டம் ஊடாக பசார் வீதியை அடைந்து, அங்கிருந்து கண்டி வீதி வழியாக சென்று வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்றலில் நிறைவடைந்தது.

இதன்போது தேசியக் கொடியை ஏந்தியவாறு வாகனங்கள் பேரணியாக சென்றதுடன், இனங்களின் கலாசாரங்களையும் பிரதிபலிக்கக்கூடிய நடைபவனியும் இடம்பெற்றது.

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

செய்தி - திலீபன்

யாழ்ப்பாணம்

யாழ். மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் ம.பிரதிபன் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

"பனைமரம் என்னும் கற்பகத் தருவினைப் பேணிப் பாதுகாப்போம்" எனும் நோக்கத்தோடு இன்றைய மாவட்ட சுதந்திரதின நிகழ்வில் - யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் யாழ்ப்பாணத்தின் அடையாளமான பனைமரம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நாட்டிவைக்கப்பட்டது.

இதன்போது வட மாகாண ஆளுநர் கூறுகையில், காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சிறப்பாக இடம் பெற்றது. ஐக்கிய இளைஞர் இயக்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. மூவின மக்களும் ஒன்றாக இணைந்து தேசிய கொடியினை பிடித்து யாழ்ப்பாணம் பண்ணையிலிருந்து நடைபவனாகவும் வாகன பேரணியாகவும் சுதந்திர தின கொண்டாட்டத்தை பெருமையுடன் முன்னெடுத்தனர். இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் பேரணி முச்சக்கர வண்டி சாதிகளின் உச்சக்கர வண்டி, பேரணியை அலங்கரித்து.

செய்தி - தீபன்

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வின் போது சத்திய பிரமாண நிகழ்வும் நடைபெற்றது.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் எதிர்கால சந்ததியினரின் கரங்களால் மரங்களும் நாட்டி வைக்கப்பட்டது. 

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

செய்தி - சுடரோன், எரிமலை

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் இன்றையதினம் காலை அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இந்த தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

செய்தி - குமார்

மன்னார்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

செய்தி - ஆஸிக்

கிண்ணியா

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று (04) மிகவும் விமர்சையாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றன.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனியின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரதான வைபவத்தில், கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.அஜீத், பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் பின்வரும் சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன:

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிண்ணியா சுமையா அரபுக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சுதந்திர தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன. ​

கல்லூரியின் அதிபர் அஸ்ஷேஹ் அப்துல்லா ரபீஸ் (மதனி) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஆர்.எம். அஸ்மி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

செய்தி - கியாஸ் ஷாபி

சாய்ந்தமருது

சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் 78வது தேசிய சுதந்திரதின நிகழ்வு கொண்டாடப்பட்டது.

நிகழ்வு சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலினதும், பைத்துஸ் ஸக்காத்தினதும் மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் பள்ளிவாசல் முன்றலில் காலை தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. 

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka 

78 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது 78 ஆவது சுதந்திர தின தேசிய கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமட் லெப்பை ஆதம்பாவா ஏற்றி வைத்தார். இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் இந்நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டு வாழவேண்டும் என்பதற்காகவும் தேசிய கீதம் இசைக்கப்பட்டடன். 

செய்தி - சிஹான் பாரூக்

திருகோணமலை

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2026) பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்றது.

கொட்டும் மழையிலும் 78ஆவது தேசிய சுதந்திர தேசியக் கொடி பிரதேச செயலாளரால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வானது இன்று (04) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்றது.

தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் | Independance Day In Sri Lanka 

செய்தி - ரொஷான்

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, கிழக்கு மாகாண சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று (04) திருகோணமலை கடற்கரையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண தலைமைச் செயலாளர், திருகோணமலை மாவட்ட செயலாளர் மாகாண சபை அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி - கந்தளாய் யூசுப்

நுவரெலியா

நுவரெலியா மாவட்ட செயலகம் , நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா மாநகசபை ஏற்பாட்டில் இன்று (04) நுவரெலியா - பதுளை பிரதான வீதி உள்ள நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக பிரமாண்டமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. இதன் தொடக்க விழா 26 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு குழுவினரின் இசை வாத்தியங்கள் முழங்க இவ்விழா அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

செய்தி - செ.திவாகரன்

GalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US