இந்தியா- பாகிஸ்தான் போட்டி: பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
2023 ஆசிய கிண்ணத் தொடரில் இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
இந்த போட்டி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நேற்றையதினம் (03.09.2023) நடைபெற்றது.
சுமார் 4 வருடங்களுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றிருந்தது.

இருப்பினும் எதிர்ப்பாரதவிதமாக மழையினால் போட்டி இடைநிறுத்தப்பட்டதையடுத்து ரசிகர்கள் ஏமாற்றமளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள்
நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதனையடுத்து மைதானத்தில் தொடர்ந்தும் மழைபெய்து வருவதால் போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்தனர்.
அதன்படி, போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        