இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று
இந்திய(India) மற்றும் இங்கிலாந்து(England) அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று(22) ஆரம்பமாகவுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி கொல்கத்தாவில்(Kolkata) இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்திய டி20 அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ்(Suryakumar Yadav) நியமிக்கப்பட்டுள்ளதுடன் துணை அணித்தலைவராக அக்ஸா் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட் போட்டி
சூர்யகுமார் யாதவ் அணித்தலைவராக இருந்த எந்த தொடரிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததில்லை என்பதால் இந்த தொடரையும் இந்திய அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் இரண்டாவது போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
மூன்றாவது போட்டியில் ராஜ்கோட் மைதானத்திலும், நான்காவது போட்டி புனேவிலும், ஐந்தாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்திலும் நடைபெற உள்ளன.
ஒருநாள் தொடர்
இந்த ஐந்து போட்டிகள் முடிந்த பின் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி பெப்ரவரி 6 அன்று ஆரம்பமாகவுள்ளதுடன் இரண்டாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 9 அன்றும், மூன்றாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 12ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 13 போட்டிகளிலும் , இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
டி20 தொடருக்கான இந்திய அணி - சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் காப்பாளர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், வொஷிங்டன் சுந்தர்(Washington Sundar), துருவ் ஜூரல் (விக்கெட் காப்பாளர்)
இங்கிலாந்து அணி - ஜோஸ் பட்லர்(Jos Buttler), ஹாரி புரூக், பென் டக்கெட், பில் சால்ட் (விக்கெட் காப்பாளர்), ஜேமி ஸ்மித் (விக்கெட் காப்பாளர்), ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், லியம் லிவிங்ஸ்டன், ஜேமி ஓவர்டன், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், அட்கிப் மஹ்மூத், , மார்க் வூட்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |