அரசாங்கத்தில் அதிகரிக்கும் ராஜபக்ஷர்கள் - பசிலை அடுத்து மற்றுமொருவரும் பதவியேற்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான பசில் ராஜபக்ஷ, இன்று நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த மற்றுமொருவரும் ராஜாங்க அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
புதிதாக சில இராஜாங்க அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
மொஹான் டி சில்வா – கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராகவும்,
சஷீந்திர ராஜபக்ஷ – சேதனப் பசளை உற்பத்தி, அபிவிருத்தி மற்றும் விநியோகம், நெல், தானிய உற்பத்தி, மரக்கறி, பழங்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய், விதை உற்பத்தி மற்றும் விவசாய தொழில்நுட்பம் ராஜாங்க அமைச்சராகவும பதவிப்பிரமாணம் செய்தனர்.
சஷீந்திர ராஜபக்ஷ அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam