இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
கோவிட் தொற்று உறுதியான மேலும் 479 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,329 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 304,161 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும்1,641 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன்,நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 273,496 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,324 ஆக அதிகரித்துள்ளது.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan