அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை: நால்வர் கைது
நாடளாவிய ரீதியில் இளம் சமூகத்தை குறி வைத்து போதைப்பொருளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (27.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் கோணப்புலம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் ஒரு தொகுதி போதைமாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணையின் பின் மல்லாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவர்கள் கைது
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடுக்கை நேற்று (27.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் சகோதரர்கள் எனவும் , அவர்கள் இருவரும் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மற்றையவர் பதுளையை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
