திருகோணமலையில் அதிகரிக்கும் போதைப்பொருள் விற்பனை - சந்தேகநபர் கைது
நாட்டில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்ற நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பாவிப்பவர்களின் வீதம் அதிகரித்து வருகின்ற நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிராந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாக சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு சந்தேகநபர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டி. சந்தியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
குறித்த சந்தேகநபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 5 கிரேம் 600 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
கிண்ணியா - பூவரசன்தீவு பகுதியைச் சேர்ந்த முகமட் சியாம் (31வயது) என்பவரை கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், குறித்த நபர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து
வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri