களத்தில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள்!உக்ரைனுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
இந்த மாத இறுதிக்குள் உக்ரைன் மீது பாரிய தாக்குதல்கள் ரஷ்யாவினால் நடத்தப்படலாம் என உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோ எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் மீதான தனது ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்த மேலும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை உக்ரைனில் இறக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
உக்ரைனில் 300,000 ரஷ்யா துருப்புகளை குவிக்கும் அறிவிப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் அண்மையில் வெளியிட்டிருந்தார், குறித்த எண்ணிக்கையில் உண்மை இல்லை, ரஷ்யா அதற்கு மேலதிகமாக 500,000 துருப்புகளை தற்போது இறக்கியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,