சிலாபம் பகுதியில் அதிகரித்துள்ள கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
சிலாபம் - உடப்பு தமிழ் பிரதேசத்தில் இன்றைய தினம் வரை கோவிட் தொற்றுக்கு உள்ளான எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது என முந்தல் சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உடப்பு பிரதேசத்தில் கோவிட் தொற்றாளர்கள் இவ்வாறு அதிகரித்துள்ளதால், சுகாதார துறையினர் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறியுள்ளனர்.
இந்த நிலைமையானது உடப்பு பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளதுடன், வயோதிபர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க கடும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
உடப்பில் கோவிட் பரவல் காரணமாக அங்கு சுமார் 500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கிரியன்கள்ளி, முந்தல், மற்றும் மாரவில பிரதேசங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணிப்புரிந்த சிலருக்கு கொரோனா தொற்றியதன் காரணமாக உடப்பு பிரதேசத்திலும் அந்த வைரஸ் அதிகளவில் பரவியுள்ளதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam