மட்டக்களப்பில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு!விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மட்டக்களப்பு- மண்முனை பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஆரையம்பதியின் பல பகுதிகளிலும், பிரதான வீதிகளிலும், கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாடுகளை வளர்ப்போர் மேய்ச்சலுக்கு விடும்போது, மக்கள் பயன்படுத்தும் பாதைகளிலும் குறிப்பாக பிரதான வீதிகளில் விடுவதனால் வீதி விபத்துக்கள் அப்பகுதியில் அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றன.
வாகனங்கள் பயணிக்கும் போது கால்நடைகள் திடீரென குறுக்கீடு செய்வதனாலும், பாய்வதனாலும், விபத்துக்குள்ளாகி பலர் படுகாயமடைந்துள்ளனர்.
வெறும் பூங்கொத்துகளுடன் முடிந்துவிடாது மகளிர் தினம் - பெண்களின் போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்த பிரதமர்
உரிய நடவடிக்கை
கால்நடைகள் வீதிகளில் கழிக்கும் எச்சங்களினாலும் பலவிதமான சுகாதார சீர்கேடுகள் நிலவி வருவதோடு, அந்த எச்சங்களிலும் வழுக்கி விழுந்து விபத்துக்கள் சம்பவித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் கட்டாக்காலியாக மாடுகளை விடுபவர்களுக்கு எதிராக ஆரையம்பதி பிரதேச சபை நிருவாகம் ஏன் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விபத்துக்கள்
எனவே அந்தப் பகுதியில் இவ்வாறு கட்டாக்காலியாக மாடுகளை விடுபவர்களுக்க எதிராக நிரந்தர திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அதனை கடைப்பிடிக்கும் வகையில் நடைமுறையை வகுக்க வேண்டும்.

இல்லையேல் தொடர்ச்சியாக இந்தப் பகுதி வீதிகளில் கட்டாக்கலியாக மாடுகளை விடுவதும், விபத்துக்கள் அதிகரிப்பதும் தொடர்கதையாகவே அமையும் எனவும் அந்தப் பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri