ஊரடங்கு சட்டத்தையும் மீறி வவுனியாவில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
ஊரடங்கு சட்டத்தையும் மீறி வவுனியா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர தெரிவித்தார்
கோவிட் தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருந்த போதும் வவுனியா நகரப்பகுதியில் அதிகளவிலான மக்கள் நடமாட்டம் காணப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தெற்று மற்றும் கோவிட் இறப்பு என்பன சடுதியாக அதிகரித்துள்ள போதும் அதனைப் பொருட்படுத்தாமல் நகரப் பகுதியில் பெருமளவில் மக்கள் வந்து செல்வதை அவதானிக்க முடிவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
வங்கிகள், மருந்தகங்கள், மரக்கறி விற்பனையகங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஒரு கதவுடன் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றை நோக்கி மக்கள் அதிகளவில் வந்து செல்வதுடன், வங்கிகளிலும், மருந்தகங்களிலும் அதிக சன நெரிசலையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த நிலை தொடருமானால் வவுனியாவின் கோவிட் பரம்பலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என சுகாதாரப் பிரிவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.










அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
