நாட்டில் 8 மில்லியனாக அதிகரித்துள்ள முட்டை நுகர்வு
நாட்டில் தினசரி முட்டை நுகர்வு சுமார் 8 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தினசரி முட்டை நுகர்வு 7 மில்லியன் என்று நுகர்வோர் தரவு அறிக்கைகள் குறிப்பிட்டாலும், கடந்த சில மாதங்களில் குறித்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் நாளாந்த முட்டை உற்பத்தி சுமார் 6 மில்லியனாக உள்ளதுடன், தேவைக்கும் வழங்கலுக்கும் இடையில் சுமார் 2 மில்லியன் முட்டைகளின் பற்றாக்குறை காரணமாக, நாட்டின் முட்டை சந்தையில் கேள்வி நிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
முட்டை இறக்குமதி
முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் ஊடாக இலங்கை சந்தையில் முட்டை விலை வேகமாக அதிகரித்து வருவதற்கும் இதுவே காரணம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் கோழி குஞ்சுகளின் வருடாந்தத் தேவை 44,000 முட்டைகளால் அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்எம்பிஆர் அழககோன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களில் இந்தத் தேவை சுமார் 80,000 ஆக இருந்தது என்றும், இந்த ஆண்டு 122,000 குஞ்சுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து தாய் கோழி குஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
