அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணம்:அறிவிப்பு நாளை மறுதினம்
பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை செய்வது சம்பந்தமான பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் செலவு அறிக்கை பயணிகள் போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச பேருந்து கட்டணத்தை 25 ரூபாவாலும் அனைத்து பேருந்து கட்டணங்களையும் 20 வீதத்தினாலும் அதிகரிக்க வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருள் விலை, உதிரிபாங்களின் விலை போன்ற துறையுடன் சம்பந்தப்பட்ட தகவல்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக் கிழமை இந்த தகவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாக பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தகவல்களை கவனத்தில் கொண்டு, புதிய பேருந்து கட்டணங்கள் நாளை மறுதினம் அறிவிக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
