வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு மாகாணத்தில் வெற்றிலை பாவனை அதிகரித்துள்ளதாக அதனால் பலரது கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(10.11.2025) அமைந்துள்ள யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடக சந்திப்பினை நடாத்திய பொதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்
கண்களில் கல் போன்ற பிறபொருட்கள்
மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையாலும் அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பு சிறுவர்களின் கண்களை பாதித்துள்ளமையால் 6 சிறுவர்களின் கண்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், கண்களில் கல் போன்ற பிறபொருட்கள் உட்புகும்போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம்.
இதனால் ஏற்படும் கிருமித் தொற்று காரணமாக நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் அபாயம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |