அத்தியாவசியப் பொருட்களின் வரி அதிகரிப்பு - வெளியான வர்த்தமானி அறிவித்தல்
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதி விசேட சரக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரி அதிகரிப்பு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விசேட வர்த்தக வரி
இதன்படி, உழுந்து, வெண்டைக்காய், கௌபி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு உட்பட்ட விசேட பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அரிசி கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவாக இருந்த விசேட வர்த்தக வரி 300 ரூபாவாகவும்,
கௌபி மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு கிலோவுக்கு 70 ரூபாவாக இருந்த விசேட வர்த்தக வரி 300 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ சோளத்திற்கு 25 ரூபா சரக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |