குடிநீர் போத்தலின் விலையும் அதிகரிப்பு
நாட்டில் நாளுக்கு நாள் அத்தியவசிய மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகிறது. டொலர் பற்றாக்குறை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாய் மதிப்பிழந்துள்ளமை இதற்கு காரணமாகும்.
ரூபாய் மதிப்பிழந்துள்ளமையானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளை போன்று வேகமாக அதிகரித்து வருவது சிக்கலுக்குரியது.
இந்த நிலையில், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் குடி நீர் போத்தலின் விலையும் அதிகரித்துள்ளது. 90 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 1.5 லீற்றர் குடி நீர் போத்தல் ஒன்றின் விலை 120 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது 33 வீதமான விலை அதிகரிப்பாகும். தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருக்கும் நாட்டில் குடிநீர் போத்தலின் விலையில் டொலர் நெருக்கடி எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேவேளை இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு இணையாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையும் அதிகரித்துள்ளது.
கோவிட் தொற்று நோய் காரணமாக மக்கள் பயன்படுத்தி வரும் முகக்கவனத்தின் விலையையும் நாளை முதல் 33 வீதத்தில் அதிகிக்க உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.