இலங்கையில் நிர்வாண புகைப்படங்களை வெளியிடும் சம்பவங்கள் அதிகரிப்பு - அஜித் ரோஹன
இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடும் செயற்பாடுகள் இலங்கையில் தற்போது அதிகரித்துள்ளதை அவதானிக்கமுடிகிறது என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாகத் திருமணத்திற்கு முன் காதலர்களாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பவற்றை வேறொருவரைத் திருமணம் செய்யும்போது பல்வேறு வழிகளில் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழமையான விடயமாக தற்போது மாறியுள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறை இணையத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த வாரத்திற்குள் மாத்திரம் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் புறக்கோட்டை, ராஜகிரிய, கண்டி கம்பாஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சட்டத்துக்கமைய ஒருவரின் தேவையில்லாத புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடுவது தண்டனை சட்ட கோவை மற்றும் சாதாரண சட்டத்துக்கமைய தண்டனைக்குரிய குற்றமாகும். இதனடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்ப உபகரணங்கள், மடிக்கணணிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களைக் கேட்டுக்கொள்வதோடு, அவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்தால் அது தொடர்பில் கடுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
