ஊரடங்கு சட்டத்தையும் மீறி கந்தளாயில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
ஊரடங்கு சட்டத்தையும் மீறி கந்தளாய் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணக்கூடியதாகவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதும் கந்தளாய் நகரப்பகுதியில் அதிகளவிலான மக்கள் நடமாட்டம் காணப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் தெற்று மற்றும் கோவிட் இறப்பு என்பன சடுதியாக அதிகரித்துள்ள போதும் அதனைப் பொருட்படுத்தாமல் நகரப் பகுதியில் பெருமளவில் மக்கள் வந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.
வங்கிகள், மருந்தகங்கள், மரக்கறி விற்பனையகங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஒரு கதவுடன் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றை நோக்கி மக்கள் அதிகளவில் வந்து செல்வதுடன், வங்கிகளிலும், மருந்தகங்களிலும் அதிக சன நெரிசலையும் காணக்கூடியதாகவுள்ளது.
இதேவேளை இந்த நிலை தொடருமானால் திருகோணமலை மாவட்டத்தின் கோவிட் பரம்பலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனச் சுகாதாரப் பகுதியினர் தெரிவிக்கின்றனர்.



தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam