இன்றிரவு முதல் வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
முச்சக்கரவண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு இன்றிரவு முதல் வாரத்திற்கு 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.
மாகாண போக்குவரத்து அதிகாரசபை மற்றும் காவல்துறை திணைக்களத்தில் இணையத்தில் பதிவுசெய்யப்பட்ட மேல் மாகாணத்தில் உள்ள முழுநேர முச்சக்கரவண்டிகளுக்கு இந்த ஒதுக்கீட்டு அதிகரிப்பு பொருந்தும் என அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் ஒதுக்கீடு வாரத்திற்கு 10 லீற்றர்
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமைய, இதுவரை 5 லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டு வந்த நிலையில், வாரத்திற்கு 10 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 6 நாட்களுக்கு முன், மேல்மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மேலதிக எரிபொருள் ஒதுக்கீட்டை பெற பதிவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருந்தார்.
இதற்காக போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சுகளால் புதிய இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Weekly Fuel quota of 5 liters for 3Wheelers on The National Fuel Pass will be increased to 10 liters per week from tonight. Quota increase will be applied for full time 3Wheeler taxis in the Western Province, registered online with Provincial Transport Authority & Police Dept.
— Kanchana Wijesekera (@kanchana_wij) November 6, 2022