நுவரெலியா மாவட்டத்திற்கான சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரிப்பு
வருட இறுதி விடுமுறையினை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் இவ்வருடத்தின் இறுதி விடுமுறையாக காணப்படுவதனாலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடு முறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் சுகாதார விதி முறைகளை பின்பற்ற தவறுவதனால் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், சுற்றுலா பயணிகள் சுகாதார விதி முறைகளை பின்பற்றுமாறும் சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் வருகை தந்த போதிலும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொது மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



