இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இவ்வருடத்தில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 19 இலட்சத்து 72 ஆயிரத்து 957 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 43 ஆயிரத்து 622 ஆகும்.
இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகள்
அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 592 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 308 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 400 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 53 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 96 ஆயிரத்து 818 சுற்றுலாப் பயணிகளும், ஆஸ்திரேலியாவிலிருந்து 88 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இந்த வருடத்தின் நவம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களில் 82 ஆயிரத்து 270 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam