நுவரெலியா மாவட்டத்திற்கு சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரிப்பு
நுவரெலியா மாவட்டத்திற்கு வார இறுதி விடுமுறையினை முன்னிட்டு உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளன.
இந்த சுற்றுலா பிரயாணிகளின் வருகை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்களில் அதிகமான சுற்றுலா பிரயாணிகள் காணப்படுகின்றனர்.
இன்றைய தினம் டெவோன், மற்றும் சென்கிளையார் நீர் வீழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக காட்சி கூடங்களில் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தனர். இவர்களில் பலர் முகக்கவசங்கள் அணிந்திருக்கவில்லை.
நாட்டில் மீண்டும் ஒரு கோவிட் அலை ஏற்படுவதற்கு இடமளிக்காது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சுற்றுலா செய்யுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்று பிரயாணிகளின் வருகை காரணமாக நடை பாதை வர்த்தக நடவடிக்கைகளும் சூடுபிடித்து வருவதாக நடை பாதை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே நேரம் செயலிழந்து காணப்பட்ட ஹோட்டல்கள் தற்போது மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு ஆரம்பித்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா பிரயாணிகளை இலக்காக கொண்டு தங்களது வாழ்வாதாரத்திற்காக பலர் வீதியோரங்களில் வர்த்தக நடவடிக்கைகளில் தற்போது முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam