சந்தையில் நெல் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்
நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் சந்தையில் நெல் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் நெல்லை கொள்வனவு செய்வதற்கு 6000 மில்லியன் ரூபாவை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரிசி கொள்வனவு
அரிசி சந்தைப்படுத்தல் சபை அரிசியை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் தனியார் துறையினர் அரிசியை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதன்படி 105 – 110 ரூபாவாக இருந்த கிரி சம்பா அரிசியின் விலை தற்போது 130ஐ தாண்டியுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |