கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நெருக்கடியாக மாறியுள்ள கோவிட் நோயாளர்கள்
நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள கோவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த நோயாளர்களுள் அதிகமானோர், கோவிட் நோயுடன் வேறு நோய் நிலைமைகளையும் கொண்டுள்ளதாக கொழும்பில் ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கோவிட் தொற்றுறுதியாகி குணமடைந்த நபர் ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை,கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் சகல படுக்கைகளிலும் தற்போது கோவிட் நோயாளிகள் நிரம்பியுள்ளதாக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அந்தோனி மென்டிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள கோவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், இவ்வாறு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கான ஒக்சிசனின் தேவையும், சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



