துப்புக் கொடுப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! - வெகுமதி தொகை அதிகரிப்பு
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகளை அதிகரிக்குமாறு போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, பொலிஸ் மா அதிபரிடம் முன்மொழிந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக பொலிஸார் பல புதிய தொலைபேசி இலக்கங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன்படி, 10 தொடக்கம் 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை சுற்றிவளைப்பதற்காக தகவல் கொடுப்பவருக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாவிற்கு பதிலாக 10,000 ரூபாவை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
25 முதல் 50 கிராம் ஹெரோயின் சோதனைக்கு தற்போது 10,000 ரூபாய் வழங்கப்படுவதுடன், புதிய முன்மொழிவின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட தொகை 20,000 ரூபாவாகும்.
50 முதல் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை சுற்றிவளைப்பதற்காக தகவல் கொடுப்பவருக்கு 20,000 ரூபா வழங்கப்படுவதுடன் புதிய திட்டத்தின் கீழ் 30,000 ரூபா வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
100 முதல் 250 கிராம் ஹெராயின் சுற்றிவளைப்புக்கு தற்போது தகவல் தருபவருக்கு 30,000 ரூபா வழங்கப்படுவதுடன், புதிய திட்டத்தின்படி பரிந்துரைக்கப்படும் தொகை 50,000 ரூபாவான அதிகரிக்கப்பட்டுள்ளது.
250 முதல் 500 கிராம் வரையிலான ஹெரோயின் சோதனை நடவடிக்கைகளுக்கு தற்போது 40000 ரூபா வழங்கப்படுவதுடன், புதிய திட்டத்தின் கீழ் 75,000 ரூபாவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
500 கிராம் முதல் ஒரு கிலோகிராம் வரையிலான ஹெராயின் போதைப்பொருளை சுற்றிவளைப்பு செய்வதற்கு தற்போது ஒரு தகவல் தருபவருக்கு 50,000 ரூபா வழங்கப்படுவதுடன் புதிய திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்படும் தொகை 100,000 ரூபா ஆகும்.
புதிய யோசனையின் கீழ் 500 கிராம் சோதனைக்கு 100,000 ரூபா வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுக்கு தற்போது தகவல் தருபவருக்கு 75,000 ரூபா வழங்கப்படுவதுடன், புதிய திட்டத்தின் கீழ் 150,000 ரூபா வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி....
துப்புக் கொடுத்தால் மிகப்பெரிய பணப்பரிசு - இலங்கை மக்களுக்கு பொலிஸார் அறிவிப்பு

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
