பொருட்களின் விலை அதிகரிப்புக்கு மொட்டுக் கட்சி எதிர்ப்பு
பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் எதிர்ப்பை வெளியிடத் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமலவீர திசாநாயக்க, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு தங்கள் எதிர்ப்பை வெளியிட உத்தேசித்துள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியவுடன் அவரை நேரில் சந்தித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவும் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடிதம் மூலம் எதிர்ப்பு
முன்னாள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஏற்கெனவே ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான ஆட்சேபணைகளை முன்வைத்திருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் மூலம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து பொருட்களின் விலை அதிகரிப்பின் பின்னணியில் செயற்படும் வர்த்தக மாபியாவைத்தோற்கடிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளனர்.
ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.பொருட்களின் விலை அதிகரிப்புக்கு மொட்டுக் கட்சி எதிர்ப்பு