மீண்டும் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயுவின் விலை
லிட்ரோ எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது குறித்து அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, எரிவாயுவின் விலையை மீளவும் அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
200 ரூபாவால் அதிகரிக்கப்படும் விலை
மீண்டும் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 ரூபா அளவில் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்கமைய, கொள்கலன் ஒன்றின் விலையை 5,100 ரூபா அல்லது அதனை அண்மித்த தொகையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லிட்ரோ 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை 4,860 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.





படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
