நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள இஞ்சியின் விலை
நாட்டில் இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி 1100 ரூபாய் முதல் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை 2400 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மக்கள் நாள்தோறும் உணவில் இஞ்சியை பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். தற்போது இஞ்சியை கொள்வனவு செய்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இஞ்சியின் விளைச்சல்
இந்த ஆண்டு இஞ்சியின் விளைச்சல் பாரிய அளவில் குறைந்துள்ளமை காரணமாகவே இஞ்சியின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக மரக்கறி மற்றும் பழங்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.
மரக்கறிகளின் விலை
அந்தவகையில், கொழும்புவில் உள்ள மக்கள் நெருக்கடியான சந்தையில் அதிக அளவிலான கடை உரிமையாளர்கள் காய்கறிகள், பழங்கள் என விற்பனை செய்கின்றனர்.
அதன் விலைவாசிகள் அதிகரித்துள்ளமை குறித்து பல கடை உரிமையாளர்கள் வெளிப்படையாக புகார் கூறி வருகின்றனர்.
மேலும் விலையைக் குறைக்கவும், குறைந்த அளவில் காய்கறி வாங்குவதைக் தவிர்க்கவும் நிறைய பேரம் பேசுவதாகக் கூறுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |