கிளிநொச்சியில் சிற்றுண்டி வகைகள் விலை அதிகரிப்பு:உற்பத்தியாளர்கள் கவலை
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாடு காரணமாகவும் அதிக விலை ஏற்றம் காரணமாகவும் பேக்கரி உற்பத்தியில் உற்பத்தி செய்யப்படும் சிற்றுண்டி வகைகளில் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளாந்த வருமானமும் நத்தார் வியாபாரத்திலும் பேக்கரி உற்பத்தி வியாபாரத்தில் இம்முறை படுவீழ்ச்சி கண்டுள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வியாபாரத்தில் வீழ்ச்சி
ஒவ்வொரு வருடமும் 400ரூபாய் தொடக்கம் 700 ரூபாய் மட்டுமே ஒரு கிலோ கேக்கின் விலை விற்பனை செய்யப்பட்டுவந்ததாகவும் தற்பொழுது 1200 ரூபாய் தாண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முட்டை ஒன்றின் விலையும் 60 ரூபாய் தொடக்கம் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதன் காரணமாகவும் பேக்கரி உற்பத்தி செய்யப்படும் ஏனையபொருட்களை விலையும் பலமடங்கு அதிகரித்து காணப்படுகின்றது.
இதன் காரணமாக உற்ப்பத்தி செய்யப்படும் பேக்கரி உற்பத்திகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.