நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 11,078 ஆகும்.
நோயாளர்களின் எண்ணிக்கை
கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினருக்கு ஒரு வகையான காய்ச்சல் பரவுவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
