யாழில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இதுவரை 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளப்பெருக்கு காரணமாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 974 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 215பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 259பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு
மேலும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 712பேரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 783 குடும்பங்களைச் சேர்ந்த 2683 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 117 குடும்பங்களைச் சேர்ந்த 439பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 144பேரும் வெள்ள நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
அத்தோடு காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 260பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 11 நிமிடங்கள் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri
