சட்டக்கல்லூரி சேர்க்கை கட்டணம் உயர்வு
சட்டக்கல்லூரி சேர்க்கை கட்டணம் 15,000 ரூபாவாகவும், பரீட்சை கட்டணம் 1,200 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்ததுடன், உயர்தரப் பெறுபேறுகள் வெளியாகும் முன்னரே சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டமை தொடர்பில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டக்கற்கைகள் பேரவையின் தீர்மானம்
இருப்பினும் புதிய வர்த்தமானியின் விதிமுறைகளுக்கு அமைய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டக்கற்கைகள் பேரவையுடன் நீண்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சட்டக்கல்லூரியானது சுமார் 5000 மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்கவுள்ளதாகவும், சட்டக்கல்லூரிக்கு அரசிடமிருந்து பணம் கிடைக்காது எனவும் நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri