பொதுத் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் நாளையதினம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,359 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 956 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2,346 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
முறைப்பாடுகளுக்கு தீர்வு
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2626 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 733 முறைப்பாடுகள் குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |