எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டு, அவற்றின் புதிய விலைப் பட்டியலை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, லங்கா டீசல்: லீற்றரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 397ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முந்தைய விலை: ரூபா 392).
விலைப்பட்டியல்..
லங்கா சுப்பர் டீசல் 4 ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 543 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. (முந்தைய விலை: ரூபா 528).

பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 424ரூபாவாக பதிவாகியுள்ளது. (முந்தைய விலை: ரூபா 414.00).
பெட்ரோல் 95 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 490 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூபா 475).
அதேநேரம், மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, ஒரு லீற்றர் தொடர்ந்து ரூபா 285 என்ற நிலையிலேயே விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
YOU MAY LIKE THIS..
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri